Wednesday, 23 May 2018

M (A) Y மனசு


சிரித்து கொள்கிறேன்
சிறு வயதில்
அனைத்துக்கும்
அழுதிருந்ததை
நினைத்து
***
நினைத்தபடியே
இருக்கிறேன்
மறப்பது
எப்படியென்று
*****
எப்படியாவது
இறந்து போகலாம்
என நினைக்கும் போதெல்லாம்
பிறந்து விடுகிறேன்
எதையாவது
ரசித்து
*********
ரசித்தபடியே
இருப்பது தான்
வெறுப்பாய்
இருக்கிறது
**************
இருக்கிறது
ஓா் இமய  கனா ,
இறவா  வரிகளை  
எழுதி விட வேண்டும்
இறந்தாலும்  
வாழ்ந்திருக்க 
*****************************


Saturday, 12 May 2018

நந்தவனமும் நானும்




















என் வருகைக்காய்
நகம் கடித்து காத்திருந்திருக்குமோ
என் நந்தவனம்.
நிலமெல்லாம்
நிறைந்திருக்கின்றன சருகுகள்.

நலம் விசாாித்த அடுத்த நொடியே
நம்பிக்கையாய் கேட்கிறது
நாளையும் வருவாய் தானே என்று

கான்கீாீிட் காடுகளை
அடிக்கடி கடப்பது,
அவ்வளவு
 எளிதல்ல என்பதை
 நான்
 எப்படி  சொல்வேன்
 என் நந்தவனமே

Thursday, 1 February 2018

2/14 கவிதைகள்













பிறர் நீ யாரென்று கேட்டால்
நானென்று சொல்
நான் வந்து கேட்டால்
என் உயிரென்று சொல்
கனவென்றே ஆனாலும்
என் காதல் நீயே கொள்

Monday, 29 January 2018

நாமாய் இருப்போம்
















அறம் இல்லா அகம் கொண்டோர் ,
அறிந்தே பேசி திரிவர் புறம்.

தரம் தாழ்ந்த விமர்சனம் காண் ,
நாம் கொள்நிலை மரம்.

வரம் உண்டு நம் வாழ்வில் ,

கொண்டோம் கணக்கிலா
கை கொடுக்கும் கரம்

Sunday, 21 January 2018

# ஞாயிறு போற்றுதல் #













அவஸ்தை தான் என்றாலும் 
உனக்காய் ஆறு (நாள் )
அமைதியாய் கடக்கிறேன்

ஆனால் நீ 
தொடங்கியதும் முடிவதும் 
முழுமையாய்
உணரும் முன்னே 
உதறிப் போகிறாய் 
உன் இருப்பை

வருவாய் திரும்பி என்ற 
நம்பிக்கை தான்
உனை பிரிவதை கூட 
வழக்கமாக்கி கொண்டிருக்கிறது

நா (ன்)  இரு 
என்றாலும் இருக்க மாட்டாய்

போய் வா ..............
  

ஞாயிறு

Wednesday, 17 January 2018

அக்கரை வானம்





எண்ண முடியுமா?
என்னால் முடியுமா ?
என்னவானாலும்
எண்ணி முடிக்கலாம்
நட்சத்திரங்களை
என்றிருக்கிறேன் நான்
*****************
இருக்கலாம்
நம்மை போலவே
நட்சத்திரங்களும்
மனிதப் புள்ளிகளை
எண்ண முடியுமாவென்று
ஏங்கிக்கொண்டு

Sunday, 14 January 2018

பொங்கல் -2018






புதிய கவலைகள்
பூத்த படிதான் இருக்குமென
புரிந்துகொண்ட புத்தி
பழைய கவலைகளை
போகி தீயில்
போட்டு எரிக்கிறது
போன வருடம் போலவே

வளம் பல பொங்க
பொங்கிய நலம் தங்க
தங்கிய வாழ்வு செழிக்க
செழித்த நம் உறவு சிறக்க
சிறந்த தை
இத் தை
தரட்டும்