Saturday, 16 January 2010

குழந்தைகளின் கேள்விகள்


குழந்தைகள் உலகம்
முழுதும்
குவியலாய் கேள்விகள்.

அவர்களின்
எல்லா கேள்விகளின்
பதில் நம்மிடம் இருப்பதில்லை
என்றாலும்,
நமக்கு பதில் தெரிந்த
எல்லா கேள்விகளையும்
அவர்கள் கேட்பதுமில்லை

சில வினாக்களின் வீச்சு
விசாலமாய்
சில விடைகளின் தேடல் போல்.

பதில் தெரியா கேள்விகளை ,
சமயங்களில்
தப்பாய் பதில் சொல்லி
சமாளிக்கலாம்,
புன்னகைத்து நகரலாம்,
எரிச்சலாய் மறுக்கலாம்.

என்றாலும் ,

பதில்லா கேள்விகளில்
நம் மனசு மாட்டிக்கொள்ள
அவர்கள்
அடுத்த கேள்விக்கு
ஆயத்தமாகி கொண்டிருப்பார்கள்.

1 comment:

  1. அருமையான கவிதை நண்பரே
    அதிலும்
    " சில வினாக்களின் வீச்சு
    விசாலமாய்
    சில விடைகளின் தேடல் போல்."

    எனக்கு புடிச்சிருக்கு.

    ReplyDelete

Leave your comments