Tuesday, 1 November 2011

நான்



சுயம் தொலைத்தல்
சுவாசித்தல் பொருட்டு என்றால்
உயிரிருந்தும்
சவமாய் வாழ்தல் சமம்.

சவமல்ல 
நான்
சத்ரியன் 

சமர் செய்வேன்
சுயம் காக்க
பயமில்லை.

என் 
வழித்தடங்கள்
ஒளிவட்டம் மட்டும்
நோக்கி.

அன்றாட போரில்
அடையாளம்  காத்து
ஆசுவாசபடுத்தி
கொள்ளும் போதெல்லாம்
சற்று ஆணவத்துடன் தான்
சொல்லி கொள்கிறேன்,

சராசரி மனிதனல்ல நான்,
சராசரிக்கும் சற்று மேல் என்று.

Monday, 31 October 2011

மழை - மீண்டும்


மழை,

காலகாலமாய்
என்   கவிப்பொருளாய்.

மழை,

அழகு
வீழ்ச்சியிலும், வீழ்ந்த பின்னும்.

சத்திரியன் போல் 
சகலரையும் ஈர்க்கும்.

மழை  யின் 

மற்றொரு பெயர்
பிரம்ம தீர்த்தம்.


நனைய தயங்கி
கூட்டுக்குள்
நாம் கிடக்க,
ஆரவாரமாய்
பெய்யும் மழை,
எழுந்து வா, நனைந்து போ என
நச்சரிக்கும் .


சூடாய் ஏதேனும்
சுவைத்த படி
மழை
ரசியுங்கள் மனிதர்களே
மண்ணில் அது சொர்க்கம்.


வாராது வந்த  மாமழையை
வசையாது
மறுபடியும் வர சொல்லி


Friday, 11 March 2011

வெள்ளி கிறுக்கல்கள் - 2


புதிய வேதம்

அன்பு சுபா
இப்பொழுதெல்லாம்
உன் பெயரை அழுத்தி
உச்சரித்தே
நல்ல இளைப்பாறுதல்
பெறுகிறேன்.
***************

நீ உயிர்தெழுந்து
வந்துவிடமாட்டாயா
என்ற எதிர்பார்ப்பில்
இருக்கிறேன்
இறந்துகொண்டே.
*******************

நீ என்னை விட்டு
விலகுவதில்லை
பிரிவதுமில்லை.
எனக்குள்ளேயே
இருக்கிறாய்.
****************

பித்துவம்

பகுத்தறியா பயமோ
பக்தியோ
எல்லா கடவுளையும்
பிடிக்கிறது எனக்கு
எந்த கடவுளுக்கும்
எனை பிடிக்கவில்லை
என்பது தெரிந்தும்.
************

Friday, 7 January 2011

வெள்ளி கிறுக்கல்கள்

ஓடிப்போனது நீ இல்லாத எட்டு மாதங்கள்.

நினைவுகள், இயலாமை ,
கேள்விகள் , சிந்தனை என
ஆர்பரிக்கும் ஆழிப்பேரலையாய்
ஆறாம் அறிவு.

அழுத்தி சிதறி வழியுது மனசு
கொட்டிவைக்கிறேன் ................
***********

இதுவும் கடந்து போகும்
என்று
அனைத்தையும் கடக்கிறேன்

உன் மரணம் தவிர்த்து.

********
கலங்கிய கண்களுடன்
கடவுள் என்பவனிடம்
கேட்கவேண்டிய
கேள்விகள் பல.

கேள்வி ஒன்று ....

கும்பிடும் போதெல்லாம்
குறைந்த பட்ச குதூகலத்தை
மட்டுமாவது எனக்கு
கொடுத்து போ
என்றுதானே கேட்டேன்

ஏன்
அவசரமாய்
அதிக பட்ச துயரம்
அளித்தாய் எனக்கு

நான் கொண்டவளை கொன்று.

தொடர்வேன் கேள்விகளை
காத்திருங்கள் கடவுள்களே
***********
சுயத்துவம்

நடந்தவைகளை மாற்ற
நம்மால் முடியாது .
ஏன் , கடவுளால் கூட
முடியாது.

நடக்க இருப்பதை மாற்ற
கடவுளால் முடியும்.
நம்மாலும் முடியும்

நாம் கடவுள்.
***********
இந்த டுவிட் என்னை டுவிட்டியது

"உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் ஒரு
முறையாவது நம்பிக்கை துரோகம் செய்து
இருக்கும் ஒரே ஆள் ----- கடவுள் மட்டுமே"


------ இதன் பிதா மகன்
லதாமகன் @ ட்விட்டர் .காம்


நன்றி.