Wednesday, 11 December 2013

11.12.13









நம்பிக்கை ரத்தத்தின்
சிறு  துளி
என்னுள்  இன்னும்

பகை நோக்கி
சொல்வேன்
வீரமாய்
" வீழ்வேனென்று  நினைத்தாயோ"

எழுவேன்
என்றேனும்  ஓர்  நாள்

சூது கொல்வேன்
சுடர் மிகு  அறிவால்

Tuesday, 7 May 2013

ச்சும்மா..........

  
கடவுளும்  நானும்  
காலை நடை பயிற்சியில் இருந்தோம் 

நடை  பழகிய  நாள் முதல் 
நண்பர் அவர்.

அவர்தான் ஆரம்பித்தார் 

நாம்   கொண்ட பந்தயம் 
நியாபகம்   இருக்கா  உனக்கு 

அன்று   முதல்
கஷ்டம் ஆயிரம் கொடுப்பேன் 
கலங்காது  வாழ்ந்தால் 
அடுத்த பிறவியில்
அதிர்ஷ்டக்காரன்  நீ

தோல்வி , கலைந்த கனவு  என 
கஷ்டம் பல  கொடுத்தும் 
கலங்காதிருக்கிறாய் 
இன்னும்   
ஒன்று குறை  ஆயிரம் கடக்க
அதை முடிக்க முடியுமா உன்னால்  
அலட்சியமாய்  கேட்டு சிரித்தார் .

கணக்கில் கெட்டி நான் .
கஷ்டங்கள்  ஆயிரம்  ஆகிப்போனதே 
அவசரமாய் சொன்னேன் அவரிடம் .

இல்லை , இல்லை , 
ஏமாற்றுகிறாய் நீ  .
ஒப்புக்கொள்  உன் தோல்வி  என்றார்.

சட்டென்று  சொன்னேன்.
சந்தேகம் என்றால்
சகலமும்  தொடங்குவோம் 
முதலிருந்து. என்று 

ஆடி போன ஆண்டவன் 
அங்கு வரவில்லை 
அடுத்த நாளிலிருந்து  
  
 

Monday, 1 April 2013

நீதானே எந்தன் .....................













காதல் மறுத்தாய்

தோழா என்றழைத்தவளை 
காதலிப்பாய  - என்று
கட்டாயப்படுத்தியது
காதல்  தீவிரவாதம் தான்
 
மன்னித்தாய்

நட்பு  மட்டுமே
நமக்குள்  என்றும்
என்றாய் .

இயல்பாய்  சிரித்து,

வற்புறுத்திய பொழுதை விட
வருந்திய பொழுது
அழகாய்  தெரிந்தேன் என்றாய்

 நீ கூடத்தான்,

மறுத்தபொழுதை விட
மன்னித்தபொழுது
அழகாய் தெரிந்தாய்

உன் மன்னிப்பை
மனசுக்குள்
மறைத்து  வைக்கிறேன்
மயிலிறகாய் .




Monday, 25 March 2013

ம(னசில்)ரணம்


 


             






மறக்க முயலும் மரணங்களையோ ,
மறைக்க முயலும் மரண பயத்தையோ
நியாபகபடுத்தி போகின்றன 
அக்கம் பக்கம் 
சட்டென்று நிகழ்ந்து போகும்
அவசர மரணங்கள்