மழை,
காலகாலமாய்
என் கவிப்பொருளாய்.
மழை,
அழகு
வீழ்ச்சியிலும், வீழ்ந்த பின்னும்.
சத்திரியன் போல்
சகலரையும் ஈர்க்கும்.
மழை யின்
மற்றொரு பெயர்
பிரம்ம தீர்த்தம்.
நனைய தயங்கி
கூட்டுக்குள்
நாம் கிடக்க,
ஆரவாரமாய்
பெய்யும் மழை,
எழுந்து வா, நனைந்து போ என
நச்சரிக்கும் .
சூடாய் ஏதேனும்
சுவைத்த படி
மழை
ரசியுங்கள் மனிதர்களே
மண்ணில் அது சொர்க்கம்.
வாராது வந்த மாமழையை
வசையாது
மறுபடியும் வர சொல்லி
வணங்குங்கள்
என்றும் வாழும் வையகம்
No comments:
Post a Comment
Leave your comments