Thursday, 8 December 2016
Tuesday, 6 December 2016
அஞ்சலி

-------------------------------------------------------------------------------------
பெண்ணிய பெருமை
பெருமைகளின் பேரரசி
ஏழைகளின் ஒளி
ஏற்றங்களின் வழி
ஆளுமையின் அடையாளம்
" அம்மா" என்ற சொல்லின் ஆதாரம்
பெற்றவளை அனுதினம் அழைப்பது வேறு
ஆண்டவள் உனை ஆராதித்தது பெரும் பேறு
கோடி தமிழர்க்கு உரமே நீ
மறைந்தாலும் , மனசுக்குள் நீ
கண்ணீருடன்
கடைசியாய் ஓர் முறை
" அம்மாஆ " என்றழைத்து
உருகி கரைவதே
உனக்கான என் அஞ்சலி
Sunday, 2 October 2016
Tuesday, 20 September 2016
Tuesday, 13 September 2016
காவேரி - வன்முறை
பிரச்சினைக்கு காரணம் நீரு
மாநிலங்கள் இரண்டும் வேறு
இணைந்துஇருப்பதே
ஒற்றுமைக்கு ஆணி வேரு
விளைவிக்கலமா அமைதிக்கு ஊறு
அஹிம்ஸாய் அணுகி பாரு
எல்லாம் சரியாகும் நேரு
காரணம்
இருவருக்கும் இந்தியன்
என்பதே பேரு
மாநிலங்கள் இரண்டும் வேறு
இணைந்துஇருப்பதே
ஒற்றுமைக்கு ஆணி வேரு
விளைவிக்கலமா அமைதிக்கு ஊறு
அஹிம்ஸாய் அணுகி பாரு
எல்லாம் சரியாகும் நேரு
காரணம்
இருவருக்கும் இந்தியன்
என்பதே பேரு
Monday, 5 September 2016
ஒருவன்

பிள்ளையாருக்கு பிறந்த நாள்
விநாயகர் வீட்டுக்கு விஜயம்
அளவில்லா அன்புடன் அல்லாவும்
ஏராளமான பரிசுடன் ஏசுவும் .
வெட்டிய கேக்கை இருவருக்கும்
எடுத்து ஊட்டி ,
எல்லா மதமும் ஒன்றே என்ற
மறை ,ஊருக்கு எடுத்து காட்டி ,
அல்லா ஆர்வம் இல்லாதிருக்க
செல்ல செல்பீயில் சேர்த்தனர்
மற்ற இருவரும்
விருந்துண்டு மகிழ்ந்து
மனமின்றி பிரிந்தனர்
அவரவர் ஆலயம் நோக்கி
ஆனவரை அனைத்தும் செய்து
மனிதம் காக்க
மாற்ற முடியா மத வெறி அடக்கி
Friday, 19 August 2016
மயில் போல பொண்ணு ஒன்னு - சினிமா பாட்டு
காட்சி : சிறு நகரத்தில் மகளிர் சுய நிதி குழு நடத்தி வசித்து வரும் ஒரு இளம் பெண் , அந்த ஊருக்கு வரும் ஒரு நகரத்து இளைஞன் மேல் காதல் கொண்டு , நம்பிக்கையுடனும் , சற்று தயக்கத்தோடும் இருக்கும் நிலையில் , தன் காதலை எண்ணி பாடும் பாடல் . இலக்கிய பாணியில் இல்லாமல் , இயல்பாய் , எளிய வார்த்தைகளால் பாடுவது போல்
இனி பாடல் .........
பல்லவி :
உயிர் கொத்தி போனயட , அழகா
உள் மனம் சென்றயடா , தலைவா
கண்ணை மூடியே நான்
காதலில் நினைத்தேன் உனையே , காதலா ஆ ஆ ஆ
அனு பல்லவி :
நன்னன்ஆ ஆ ஆ , நன்னன்ஆ ஆ ஆ
நா நானா நா நானா ஆ ஆ ஆ ஆ
(வயலின் பிட் )
முதல் சரணம் :
சொல்லில் அடங்குமா , உன் அழகு
மௌனம் கலைத்தே நீ மொழி பழகு
நானோ சாயங்கால சென் நிலவு
கள்ளப்பார்வையில்எனை செய்கிறாய் களவு உ உ உ
(புல்லாங்குழல் பிட்)
இரண்டாம் சரணம் :
ஏங்கி தவிக்குதே என் தேகம்
கடல் ஆழம் தாங்குமா என் மோகம்
நானே உன் காதலி , அது யோகம்
இல்லையென்றால் தாக்குமே பெரும் சோகம் ம் ம் ம் ம்
(வயலின் & புல்லாங்குழல் பிட் )
மூன்றாம் சரணம் :
தினம் நீ எனை பார்க்கும் நொடிகள்
பூக்குதே என்னுள் ரோஜா செடிகள்
நீ வந்து எனை சேரும் பொழுது
உன் மார்பில் சாய்ந்தமர்வேன் சற்று அழுது
( Instrumental Repeat)
இனி பாடல் .........
பல்லவி :
உயிர் கொத்தி போனயட , அழகா
உள் மனம் சென்றயடா , தலைவா
கண்ணை மூடியே நான்
காதலில் நினைத்தேன் உனையே , காதலா ஆ ஆ ஆ
அனு பல்லவி :
நன்னன்ஆ ஆ ஆ , நன்னன்ஆ ஆ ஆ
நா நானா நா நானா ஆ ஆ ஆ ஆ
(வயலின் பிட் )
முதல் சரணம் :
சொல்லில் அடங்குமா , உன் அழகு
மௌனம் கலைத்தே நீ மொழி பழகு
நானோ சாயங்கால சென் நிலவு
கள்ளப்பார்வையில்எனை செய்கிறாய் களவு உ உ உ
(புல்லாங்குழல் பிட்)
இரண்டாம் சரணம் :
ஏங்கி தவிக்குதே என் தேகம்
கடல் ஆழம் தாங்குமா என் மோகம்
நானே உன் காதலி , அது யோகம்
இல்லையென்றால் தாக்குமே பெரும் சோகம் ம் ம் ம் ம்
(வயலின் & புல்லாங்குழல் பிட் )
மூன்றாம் சரணம் :
தினம் நீ எனை பார்க்கும் நொடிகள்
பூக்குதே என்னுள் ரோஜா செடிகள்
நீ வந்து எனை சேரும் பொழுது
உன் மார்பில் சாய்ந்தமர்வேன் சற்று அழுது
( Instrumental Repeat)
Thursday, 28 July 2016
கபாலி

கபாலி
ஆரம்பித்த 10 நிமிஷத்துக்குள்ள நம்பள பசக்னு படத்துக்குள்ள இழுத்து
போடற மாஜிக் எதையும் ரஞ்சித் யோசிக்கல ., வைக்கல
படம் மொத அரை மணி நேரம் பட்டாசுன்னு எழுதி இருக்கிறவங்க எல்லாரும் எந்த ரீல இருந்து படம் பாத்தாங்கன்னு சந்தேகமா இருக்கு
ரித்விகா கேரக்டரா ரகசியமா வச்சுருக்கோம் , அது ஆடியன்ஸுக்கு ஒரு
சர்ப்ரைசா இருக்கும்னு ரஞ்சித் ஒரு பேட்டியில சொல்லி இருக்காரு.
அது ஆடியன்ஸுக்கு இல்ல , ஒருவேளை தயாரிப்பாளருக்கு ரித்விகவா
காஸ்ட் பண்ணியிருக்கிறத சஸ்பென்ஸா வச்சிருப்பாருனு நினைக்கிறேன்
கதை நாயகனோட என்ட்ரி எப்படி வைக்கணும்னு கூட ரஞ்சித் ரஜனிக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்காதது , ரஜினியையும் , அவரோட வெறித்தனமான ரசிகர்களையும் மதிக்கலன்னு தெரியுது .
இருபத்தி அஞ்சு வருஷம் கழிச்சி , பல கஷ்டங்களுக்கு அப்புறமா சந்திக்கிற தம்பதிகளிடம் இருக்க கூடிய ஒரு இயல்பான உணர்ச்சி கரமான விசுவல்ஸ் கூட கொண்டுவரல டைரக்டர்.
இது பரவாயில்ல , ராதிகா ஆப்தே ரஜினி கூட வர தன்னோட மக தன்ஷிகாவை கண்டுக்கவே இல்ல . அது ரஜினி யோட டச் அப் கேர்ள் னு
நினைச்சி இருப்பாங்க போல .தன்ஷிகாவும் அது மாதிரி ஒரு காஸ்ட்டியும் ல தான் வராங்க .
ரஜினிக்கு நான் கத பண்ணல , ரஜினிதான் என்னோட கதைல நடிச்சிருக்காருனு ரஞ்சித் சொல்லி இருக்காரு. இது ரஜினியை நிச்சயம் சங்கட படுத்தும் .
படத்தோட மியூசிக் , இயக்கம் எதுவும் ரஜினிக்காக மெனக்கெட்டு செய்யலன்னு நல்ல தெரியுது.
பாவம் ரஜினி .
மொத்தத்துல கபாலி - அயர்ச்சி
Saturday, 18 June 2016
ஆண் = பெண்

சமம்தான் என்று சம்மதித்த போதும்
மனிதி , இறைவி என்று , ஏன்
மல்லு கட்டுகிறிர்கள்
ஏன் இந்த தீவிரவாதம் ?
பெண்களை போற்றுதல் பொருட்டு
அரக்கர் போல்
ஆண்களை
அடையாள படுத்தாதீர்கள்
ஆணாய் பிறந்ததே அவமானமோ என
ஆண் மனதை அழ செய்யாதீர்கள்
அது கூட ஒரு வகை
பாலியல் வன்மம் தான்
பெண்ணை , பெண்ணாய் மட்டும்
ஆணுக்கு அறிமுக படுத்துங்கள்
சமமாய் சாதிக்க சொல்லுங்கள்
Sunday, 29 May 2016
நினைவேந்தல்
என் அன்பே ,
நீண்டு கொண்டே இருக்கின்றன
நீயில்லா பொழுதுகள்
உனக்காய் வாழாமல் ,
என் உயிராய் வாழ்ந்தாய்
பின் ஏன் உயிர் பிரிந்தாய்
நீ இருந்து இருக்கலாம் என்னோடு
இல்லை
நான் இறந்து இருக்கலாம் உன்னோடு
இன்றி
இதயம் நொறுங்கி
உருகி கரையுது
என் உயிர்
உன்னை வந்தடையும் நாள் நோக்கி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்காய் , என்னிடம்
இன்னும் மிச்சமிருக்கும்
காதலும் , கண்ணீருடனும்
நீண்டு கொண்டே இருக்கின்றன
நீயில்லா பொழுதுகள்
உனக்காய் வாழாமல் ,
என் உயிராய் வாழ்ந்தாய்
பின் ஏன் உயிர் பிரிந்தாய்
நீ இருந்து இருக்கலாம் என்னோடு
இல்லை
நான் இறந்து இருக்கலாம் உன்னோடு
இன்றி
இதயம் நொறுங்கி
உருகி கரையுது
என் உயிர்
உன்னை வந்தடையும் நாள் நோக்கி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்காய் , என்னிடம்
இன்னும் மிச்சமிருக்கும்
காதலும் , கண்ணீருடனும்
Friday, 15 January 2016
பொங்கல் -2016
பொங்கல் சிந்தனை
**********************

கொட்டி வை நெல்லு திட்டு
கட்டி வை கரும்பு கட்டு
வேட்டியை இறுக்கி கட்டு
நடக்குமா ஜல்லிக்கட்டு
எப்ப முடியும் இந்த மல்லுகட்டு
---------------------------------------
ஜல்லிகட்டை நடத்து
கலாசாரத்தை காப்பாற்று
கத்தியபடி கலைந்து
போனவர்களின் வீட்டில்
எல்லாம் பொங்கல்
குக்கரிலா , மண் பானையிலா
# சந்தேகம் #
-------------------------------------------
தமிழர்களே ,தமிழர்களே
ஐந்தாண்டுக்கு
தை திங்களை
புது வருஷ நாள் என்றும்
அடுத்த ஐந்தாண்டுக்கு
பொங்கல் திரு நாள் என்றும்
கொண்டாட பழகி
கொள்ளுங்கள்
# அவல அரசியல் #
---------------------------------------------------
முன்னிரவு கோலம்
குக்கர் பொங்கல்
கடிக்க பயந்து கரும்பு ஜூஸ்
வாட்ஸ் அப்பில் வாழ்த்து
நட்பு , உறவு சந்திப்பு தவிர்த்து
கூட்டுக்குள் முடங்கி
தொலைகாட்சியில்அடங்கி
கொண்டாடி மகிழ்வோம்
பொங்கலோ பொங்கல்
-------------------------------------------------
கல்யாண காலம்
காதல் மறந்து
காலம் கடந்தேன்
எனக்கான நீ
எங்கேனும் காத்திருப்பாய்
என்று .
பெண் பார்க்கும் நாள்.
உன் முதல் விழி வீச்சில்
ரசாயன மாற்றம்
நிகழவில்லை ஏதும்
என்னுள்
காபி கோப்பை தந்தபடி
கடை கண்ணால் பார்த்தாலும்
களவாடவில்லை ,
நீ
என் இதயம் .
பிடிச்சிருக்கா ,என்ற
உறவின் கேள்விக்கு
பிடிச்சிருக்கு என சொல்லி
நீ விட்டுசென்ற
வெட்கத்தில் தானடி
வீழ்ந்தேன் நான்.
திருமணங்கள் சொர்க்கத்தில் தான்
நிச்சயிக்கபடுகின்றனவாம்
நாம் திருமணம்
நிச்சயிக்கபட
நாம் இருந்த இடமே
சொர்கமானது.
திருமண நாளில்
உன் மலர் கழுத்தில்
மங்கள நானின்
முதல் முடிச்சை - " நான் "
இரண்டாம் முடிச்சை - " உன்னை "
மூன்றாம் முடிச்சை -- "காதலிக்கிறேன் "
என சொல்லித்தான்
அணிவித்தேன் .
அறிவாயா நீ .
அதிர்ஷ்ட காரியடி நீ , என்று
உன்தோழிகள்
அவசரமாய் சொல்லி போனதை
கவனித்த நான்,
என் நண்பர்கள்
மச்ச காரண்டா நீ ,என்றதை
மறைக்க முடியவில்லை
உன்னிடம் .
சொந்தங்கள் கூடி
செய்த பந்தம் , இது
வா தேவதையே
நீ என் சொந்தம் .
காதலித்து பார்க்கவில்லை
காதலிக்க நேரமில்லை
கல்யாணமா காதலின் எல்லை.
கவலை விடு
அன்பே
ஆதலினால்
இனி காதல் செய்வோம்
Subscribe to:
Posts (Atom)