களவாடிய பொழுதுகள்
காத்திருப்பில்
கரைகின்றன
கனவுகள்
கனியா
காத்திருப்பு
கலைத்து
போடும்
தன்னம்பிக்கை
இருப்பு
நல் வாய்ப்புக்கு
காத்திருக்க
சொல்லி
நம்
பொழுதுகளை
நயவஞ்சகமாய்
களவாடி
போகிறது காலம்
உறுமீனும்
உறுபசியும்
உதாரணத்துக்கு
மட்டும்.
உதவாது
உலகியல் வாழ்வுக்கு
No comments:
Post a Comment
Leave your comments