மானுடம் சபிக்கப்பட்டதாய்,
ஆடிக்களைந்தும் ஆவல் ,தேடல் திசை அறியாமல் ,
இன்னும்பிற .
அனுபவம் பலமாய்
ஆகிருதி வளர்த்தும்
எதிர்ப்புகள், மேலும்
ஏராளமாய் .
நட்பு - வஞ்சம் ,
காதல் - தோல்வி ,
இலக்கு - ஓட்டம் ,
எல்லாம் , எல்லாம் .
உணர்வுகள் உறுத்தி
ஊனம் செய்ய,
உள்ளம் உதறி
உதாசீனம் .
அடுத்த முறை அடைய
ஆசை , பேராசை ,
தொடர்கிறது ஆட்டம் .
இங்கு வித்தை தெரிந்தால்
வெளிச்சம் ,
வெளிச்சமே விமர்சனம் .,
முடிவதில்லை விலக்க,
விலகவும்கூட.
இந்த மந்தைகள்
ஓட்டம்
மரணம் வரை .
கலந்து போவது
கட்டாயம் , அறிக
நிரந்தரம் ஏதுமில்லை
நிகழ்வுகள் தவிர்த்து .
No comments:
Post a Comment
Leave your comments