காதலர் தினம் வரதுனால , இங்க , யூத்துகளும், யூத்து , யூத்துனு சொல்லிக்கிற பெர்சுகளும் காதல் கவிதை எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு , தூள் கிளப்ப தயார இருக்குற , இந்த நேரத்துல , நாமளும் ரௌடி தான்னு ப்ரூப் பண்ண வேண்டிய கட்டாயத்தால , குளத்துல .. சாரி , களத்துல குதித்தாச்சு.
இனி ..... ஒரு காதல் அனுபவத்திற்கு தயாராகுங்கள் ...........
வேண்டும்
தேவதை.
******
தேவதைகள் காற்றில்
மிதந்துதான் வருவார்களாம்.
காதில் கேட்ட செய்தி.
நீ நடந்தல்லவா வருகிறாய்
மாறாக,
உன்னை பார்த்ததும்
நானல்லவா
மிதந்து கொண்டேயிருக்கிறேன்
காற்றில் தினமும் .
*********
தினமும்
நீ அலுவலகம் நுழைந்தவுடன்
'ஹாய்' சொல்லும் அழகை காண
அலைகிறது மனசு
பேயாய் .
*********
"பேய்"
ஒரு அழகிக்கு
நான் வைத்த செல்ல பெயர்.
தெரியும் , சொன்னால்
பேசாமல் போவாய்
என்னுடன்.
**********
என்னுடன் பேசும்போதெல்லாம்
ஏதாவது புத்தகம் ஒன்றை
இறுக்கி அணைத்தபடி பேசுகிறாயே,
பரிசோதித்துதான் பாரேன்
புத்தகங்களை விட
நான் மென்மையானவன்.
சொன்னவுடன் ,
பரிசளித்து போனாய்
உன் வெட்கத்தை .
***********
உன் வெட்கத்தை
தயவு செய்து
வீட்டிலேயே விட்டு வா
நீ வெட்கப்படும் அழகை
வேடிக்கை பார்த்து
வேலைகள் ஏதும் நடக்காது
முடங்கிபோகிறதாம்
அலுவலகம் .
*********
நீ அலுவலகம் நுழைந்தவுடன்
'ஹாய்' சொல்லும் அழகை காண
அலைகிறது மனசு
பேயாய் .
*********
"பேய்"
ஒரு அழகிக்கு
நான் வைத்த செல்ல பெயர்.
தெரியும் , சொன்னால்
பேசாமல் போவாய்
என்னுடன்.
**********
என்னுடன் பேசும்போதெல்லாம்
ஏதாவது புத்தகம் ஒன்றை
இறுக்கி அணைத்தபடி பேசுகிறாயே,
பரிசோதித்துதான் பாரேன்
புத்தகங்களை விட
நான் மென்மையானவன்.
சொன்னவுடன் ,
பரிசளித்து போனாய்
உன் வெட்கத்தை .
***********
உன் வெட்கத்தை
தயவு செய்து
வீட்டிலேயே விட்டு வா
நீ வெட்கப்படும் அழகை
வேடிக்கை பார்த்து
வேலைகள் ஏதும் நடக்காது
முடங்கிபோகிறதாம்
அலுவலகம் .
*********
அலுவலக வாகனத்தில்
ஜன்னல் ஓரங்களை
தவிர்த்துவிடு நீ.
உன் ஓர விழி வீச்சில்
விபத்துக்கள் நேரலாம்,
உனை தொடரும் எனக்கு.
*********
ஜன்னல் ஓரங்களை
தவிர்த்துவிடு நீ.
உன் ஓர விழி வீச்சில்
விபத்துக்கள் நேரலாம்,
உனை தொடரும் எனக்கு.
*********
எனக்கு பிடித்த நடிகை படத்தை
உன் கம்ப்யூட்டர் டெஸ்க் டாப்பில்
எனக்காய் வைத்திருக்கிறாயே
உனக்காய், நீ ரசிக்கும் நடிகரின்
படம் , நான் வைத்திருக்கும்
ரகசியம் தெரியுமா , உனக்கு
********
உன் கம்ப்யூட்டர் டெஸ்க் டாப்பில்
எனக்காய் வைத்திருக்கிறாயே
உனக்காய், நீ ரசிக்கும் நடிகரின்
படம் , நான் வைத்திருக்கும்
ரகசியம் தெரியுமா , உனக்கு
********
உனக்கு மட்டும் அழகாய்
அமைந்துவிடுகிறது
சோம்பல் முறிப்பு
வேலை முடித்து
********.
வேலை முடித்து
இருக்கை விட்டு
எழ நீ எத்தனிக்கும் போதே
இறந்துபோகிறது என் மனசு.
**********
உயிர்த்தெழ, மீண்டும்.........
......
அமைந்துவிடுகிறது
சோம்பல் முறிப்பு
வேலை முடித்து
********.
வேலை முடித்து
இருக்கை விட்டு
எழ நீ எத்தனிக்கும் போதே
இறந்துபோகிறது என் மனசு.
**********
உயிர்த்தெழ, மீண்டும்.........
......
என்னங்க இவ்ளோ நல்லா எழுதறவரா இருக்கீங்க... மொத்தமா எல்லாப்போஸ்டுக்கும் சேர்த்து ஒரே ஒரு கமெண்ட்தான் இருக்கு...
ReplyDeleteமார்க்கெட்டிங் சரியாப் பண்றதில்ல போல...
நிறைய பேரைப் போய்ப் படிச்சு கமெண்ட் போடுங்க.. பதிவெழுதிட்டு கூப்பிடுங்க... என்ன பாஸ் இது....
நன்றி குரு, தங்கள் வருகைக்கும் , அறிவுரைக்கும்
ReplyDeleteஇனி தொடர்கிறேன் .