Friday, 27 January 2017

வலியது













வந்தும் , போனபடி
இருந்தாலும்
இருந்துகொண்டே தான்
இருக்கிறது
வாழ்க்கையில்
ஏதாவது  ஒரு
 வலி


Friday, 20 January 2017

தமிழினம்













ஆதி குடியடா   நாங்கள்
எம் அடையாளம்

அழிப்பீரோ நீங்கள் !


எத்தனை செய்வீர்  வழி , எமை அழிக்க
அத்தனை   உடைத்தெழுவோம்

எம்மினம்  செழிக்க

 
புரிந்ததா  

 சீண்டியது   தவறென்று
 
உணர்ந்தீரா  

 நாங்கள் வீரத்தின் உருவென்று  

தோற்றது உங்கள் வீண் வாதம்
வீழ்வது நாமாயினும் ,

வாழ்வது தமிழாகட்டும்
இதுவே  எங்கள்  வேதம்

உயிர் கொடுத்தேனும்

காப்போம்  பண்பாடு
இனியும்  எம்மிடம் மோதுவது  உம்  பாடு

தாழ் பணியுங்கள் , 

தணியலாம் எம் சினம்

நாங்கள் 

சூழ்பகை எரிக்கும்  

சுடர் மிகு  தமிழினம்

 


Saturday, 14 January 2017

பொங்கல்- 2017













எண்ணத்    தை
நினைத்த   தை
நிஜமாக்கி  போகட்டும்  இத்  தை

மல்லுக்கட்டி  நின்ற  தை
எல்லாம்
மாற்றி போகட்டும்  இத்  தை

கத்   தை   பணம் 
வித்  தை  குணம்
விருத்தி செய்து போகட்டும்  இத்  தை

நட்ப   தை
சொந்த  தை
சுகமாக்கி போகட்டும்  இத்  தை

இனிய தமிழ் பொங்கல் நல் வாழ்த்துக்கள்





Saturday, 7 January 2017

காலம் கடந்தல்












இதுவும் கடந்து போகும் என  நம்பிக்கையில்,
கடக்க வேண்டிய கட்டாயத்தில்
அனைத்தும் கடக்கிறோம்
காலம்  நம்மை அதனுள்
கண் கட்டி  கடத்தி போவதை
அறியாமலே


வாழ்தல் பொருட்டு











பரங்கி மலை  ரயில்வே
சுரங்க பாலத்தில்
ஒற்றை பாய்  விற்க
ஒரு நாள் முழுதும்
 உழைத்து களைக்கும்
அந்த முதியவருக்கு
 உட்கார்ந்தபடியே
 இருந்தால்தான்
 உறக்கம் வருமாம்


ஆண் - அழகன்




 சிறு வயசில்  இன்னும் அழகாய்
 இருப்பான் இவன் என
அம்மா ,என் மனைவியிடம் ,
அவள்  வந்த பொழுதிலும்

அப்பல்லாம் உங்க அப்பா
அவ்வளவு அழகு என
 மனைவி  என் பிள்ளைகளிடம் ,
 அவர்கள்  வளர் பொழுதிலும்

 எங்க அப்பா இன்னும் அழகாய்
 இருந்தார் என
 பிள்ளைகள் அவர்கள்
 வாழ்க்கை  பட்டவர்களிடம்
 சொல்லி கேட்ட
 தருணங்களில் தான்

 அறிந்து கொண்டேன்
அதுவரை  நான்
அவ்வளவு  அழகாய்
இருந்தது இல்லை என்று