சிறு வயசில் இன்னும் அழகாய்
இருப்பான் இவன் என
அம்மா ,என் மனைவியிடம் ,
அவள் வந்த பொழுதிலும்
அப்பல்லாம் உங்க அப்பா
அவ்வளவு அழகு என
மனைவி என் பிள்ளைகளிடம் ,
அவர்கள் வளர் பொழுதிலும்
எங்க அப்பா இன்னும் அழகாய்
இருந்தார் என
பிள்ளைகள் அவர்கள்
வாழ்க்கை பட்டவர்களிடம்
சொல்லி கேட்ட
தருணங்களில் தான்
அறிந்து கொண்டேன்
அதுவரை நான்
அவ்வளவு அழகாய்
இருந்தது இல்லை என்று
No comments:
Post a Comment
Leave your comments