மழை நேர மண் வாசம் போல
மனசுக்குள் நீ வந்தாய் மெல்ல
ஏதோதோ செய்தாய் நெஞ்சை கிள்ள
ஐயோ வேறென்ன நான் இங்கு சொல்ல
சொல்லிப்போ ...போ ... போ ....
உன் காதலை
.
ஏதேனும் சொல்வாயா கண்ணே
இன்றேனும் வருவாயா பெண்ணே
உன் மௌனங்கள் ஆயுளை கொல்ல
சாகிறேன் நான் இங்கு மெல்ல
சொல்லிப்போ ...போ ...போ
உன் காதலை
காற்று வெளியிடையில் அன்பே
உனக்காய் காத்திருக்கிறேன் உயிரே
வந்தங்கு இறங்கு வசந்தமே
வானெங்கும் நம் காதல் சுகந்தமே
சொல்லிப்போ ...போ ...போ
உன் காதலை
No comments:
Post a Comment
Leave your comments