Sunday, 23 April 2017

# ஞாயிறு போற்றுதல் #







ஆயிரம் சொல்லுங்கள் 
ஞாயிறு சிண்ட்ரோமை 
அனுபவிக்காதவர்கள் 
அரை மனிதர்கள்தான் 

தாமத விடியல் 
தாமத குளியல் என்று 
ஞாயிறு தின வேலைகள் 
தாமாய் தான் நடக்கும் 
தாமதமாய் தான் கடக்கும் 

எத்தனை எச்சரிக்கையாய் 
இருந்தாலும் 
சோம்பலுடன் சோடி 
போட்டு விடுகிறது 
எல்லா ஞாயிறும் 

நேர நேர்மை 
நேர்வதேயில்லை 
ஞாயிறு தினங்களில் 

இந்த வாரமாவது 
செய்யணும் என்ற 
வேலை பட்டியலை 
சமாதானத்துக்கு 
சனியிரவே அழைக்க 
ஆரம்பிக்கின்றன 
ஞாயிறு  சோம்பல்கள் 

திங்களை திட்டாமல் 
ஞாயிறுகளை 
கடப்பதில்லை 
நாம் 
காலகாலமாய்

காதல் சந்திப்பின்
கடைசி நொடிகளை போல் 
எல்லா ஞாயிறின் இரவுகளையும் 
கனத்த மனசோடுதான்
கடக்க வேண்டியிருக்கிறது 
சற்றே நீண்டிருக்கலாம்
என்ற சலனத்துடன்




Monday, 10 April 2017

கா( ன ) (த) ல்












 எங்கிலும் எனை
 கடக்கும் காதலர்களிடம்
 காதலியினுள்  ஒரு  கதாநாயகியும்
 காதலனிடம்  ஒரு கதாநாயகனும்
 கவனமாய் களமாடுவதை
 கவனிக்கிறேன்
 காதல்  ஒரு கானல் போல் 


Friday, 7 April 2017

கனா















என் இரவுகளை
கனவுகளே
கடத்தி போகின்றன
எந்நாளும்

கனக்கின்றன கனவுகள்
உறக்கமில்லா  இரவுகளில்  கூட

உறங்குவது போல்
கண்டதேயில்லை கனா
இது வரை நான்

எந்த கனவையும்   மீண்டும்
கண்டதில்லை ஒருபோதும்  நான்

பலித்த கனவுகளாய்  பட்டியல்
ஒன்று இல்லையென்றாலும்
கனவு பலன்கள்
ஆராயாது  ஆரம்பிப்பதில்லை
என் 
அடுத்த நாள் காலை

அதோ
என்  உறக்கத்தை   களவாட
படுக்கையில்
காத்து கிடக்கின்றன
கணக்கில் அடங்க
கனவுகள்

எதிர்ப்பேதும் செய்யாமல்
நிராயுதபாணியாய்
நித்திரைக்கு போகிறேன்
நேற்றை போலவே


Wednesday, 5 April 2017

அசிஸ்டென்ட் டைரக்டர்














கனவுகள் களவாடிய  கண்கள் 
உணர்ச்சிகளை உள் மறைத்த உதிரா தாடி 
உரிமை மறந்த உடல்மொழி 
வானத்தில் வார்த்தை  தேடல் 
முதல் வாய்ப்புக்காய்  முழு நேர தவம் 

இந்த வர்ணனைக்கு உரிதாய் வந்தவன் 
நான்  அனுமானித்தபடியே 
சினிமா துறையில் 
அசிஸ்டென்ட்  டைரக்டர்  
என்று தன்னை 
அறிமுகப்படுத்தி  கொண்டான் 

Saturday, 1 April 2017

லோக்கல் - தர லோக்கல்
















ஏய்

டண்டணக்க,  டண்டணக்க  டண்டணக்க  டோய்
ஏய், டண்டணக்க,  டண்டணக்க டனுக்கு டக்க  டோய்

வாரேன் மச்சான் வாரேன்
உங்க  ஏரியா   வாரேன்
நீயும் வேணா  பாரேன்
டப்  பைட்டு தாரேன்

டண்டணக்க,  டண்டணக்க  டண்டணக்க  டோய்
ஏய், டண்டணக்க,  டண்டணக்க டனுக்கு டக்க  டோய்

ஏய்

மேல போகுது  மெட்ரோ
வானவில்னா  விப்ரோ
அவ வளைச்சி விட்டா  ஐப்ரோ
அது என்னோட ஆளு ப்ரோ

டண்டணக்க,  டண்டணக்க  டண்டணக்க  டோய்
ஏய், டண்டணக்க,  டண்டணக்க டனுக்கு டக்க  டோய்

ஏய்
யாரு இப்ப CM
Afternoon ன  PM
ஆகாயம்னா  நீலம்
இது என்னோட நேரம்

டண்டணக்க,  டண்டணக்க  டண்டணக்க  டோய்
ஏய், டண்டணக்க,  டண்டணக்க டனுக்கு டக்க  டோய்

ஏய்

வில்லன் உனக்கு நானா
மோதி பாரு வேணா
உன்ன ஜெயிக்க விடுவேனா
இது என்னோட கானா

டண்டணக்க,  டண்டணக்க  டண்டணக்க  டோய்
ஏய், டண்டணக்க,  டண்டணக்க டனுக்கு டக்க  டோய்