Wednesday, 5 April 2017

அசிஸ்டென்ட் டைரக்டர்














கனவுகள் களவாடிய  கண்கள் 
உணர்ச்சிகளை உள் மறைத்த உதிரா தாடி 
உரிமை மறந்த உடல்மொழி 
வானத்தில் வார்த்தை  தேடல் 
முதல் வாய்ப்புக்காய்  முழு நேர தவம் 

இந்த வர்ணனைக்கு உரிதாய் வந்தவன் 
நான்  அனுமானித்தபடியே 
சினிமா துறையில் 
அசிஸ்டென்ட்  டைரக்டர்  
என்று தன்னை 
அறிமுகப்படுத்தி  கொண்டான் 

No comments:

Post a Comment

Leave your comments