ஆயிரம் சொல்லுங்கள்
ஞாயிறு சிண்ட்ரோமை
அனுபவிக்காதவர்கள்
அரை மனிதர்கள்தான்
தாமத விடியல்
தாமத குளியல் என்று
ஞாயிறு தின வேலைகள்
தாமாய் தான் நடக்கும்
தாமதமாய் தான் கடக்கும்
எத்தனை எச்சரிக்கையாய்
இருந்தாலும்
சோம்பலுடன் சோடி
போட்டு விடுகிறது
எல்லா ஞாயிறும்
நேர நேர்மை
நேர்வதேயில்லை
ஞாயிறு தினங்களில்
இந்த வாரமாவது
செய்யணும் என்ற
வேலை பட்டியலை
சமாதானத்துக்கு
சனியிரவே அழைக்க
ஆரம்பிக்கின்றன
ஞாயிறு சோம்பல்கள்
திங்களை திட்டாமல்
ஞாயிறுகளை
கடப்பதில்லை
நாம்
காலகாலமாய்
கடைசி நொடிகளை போல்
எல்லா ஞாயிறின் இரவுகளையும்
கனத்த மனசோடுதான்
எல்லா ஞாயிறின் இரவுகளையும்
கனத்த மனசோடுதான்
கடக்க வேண்டியிருக்கிறது
சற்றே நீண்டிருக்கலாம்
என்ற சலனத்துடன்சற்றே நீண்டிருக்கலாம்
No comments:
Post a Comment
Leave your comments