
என் இரவுகளை
கனவுகளே
கடத்தி போகின்றன
எந்நாளும்
கனக்கின்றன கனவுகள்
உறக்கமில்லா இரவுகளில் கூட
உறங்குவது போல்
கண்டதேயில்லை கனா
இது வரை நான்
எந்த கனவையும் மீண்டும்
கண்டதில்லை ஒருபோதும் நான்
பலித்த கனவுகளாய் பட்டியல்
ஒன்று இல்லையென்றாலும்
கனவு பலன்கள்
ஆராயாது ஆரம்பிப்பதில்லை
என்
அடுத்த நாள் காலை
அதோ
என் உறக்கத்தை களவாட
படுக்கையில்
காத்து கிடக்கின்றன
கணக்கில் அடங்க
கனவுகள்
எதிர்ப்பேதும் செய்யாமல்
நிராயுதபாணியாய்
நித்திரைக்கு போகிறேன்
நேற்றை போலவே
No comments:
Post a Comment
Leave your comments