கண்
மூடி இருக்கையில்
எல்லாம்
ஏதாவது
ஒரு கவிதையை
கற்றுக்கொடுக்கிறது
உன் காதல்
சகலமும்
செய்தும்
சமாளிக்க
முடிவதில்லை
காதல்
காலங்களில்
சொன்ன
சாகா
பொய்கள்
என்
நினைவிலிக்கிறது
காதல்
காலங்களில்
எழுந்து
போ, எழுந்து போ
என போலியாய்
எரிந்து
விழுவாய்
அசையாது
அமர்ந்தபடியும் ,
என்
விரல்களை விடாத படியும்
மறுக்க
மாட்டாய்
காதல்
காலங்களில்
மறந்து
போ மறந்து போ
என மறுபடி மறுபடி
சொல்லியே
என்
மனசுக்குள் வந்ததை
இன்றும்
நம் காதல் சாலைகளை
கடக்கையில்
பார்க்கிறேன்
காதல்
காலங்களில்
நாம்
விட்டு வந்த
வெட்கப்பூக்கள்
விளைந்து கிடப்பதை
அழியாமல்
இருக்கிறது
ஆப்டர்
மேரேஜிலும்
நம்
காதல் கால
அரோமா
No comments:
Post a Comment
Leave your comments