மாநிலம்
கடப்பேன் என்கிறார்கள் மக்கள்
நாடு
கடப்பேன் என்கிறார்கள் நடிகர்கள்
அறிவிப்பின்றி
அடிக்கடி
அண்டம்
கடக்கிறார்கள் அரசியல்வாதிகள்
கடுப்பேறிய
எனை போன்ற
காமன்மேன்
என் செய்ய ?
பெருங்கோபம்
பொறுத்து
போலி
பேராண்மை பேணி
காலம்
கடத்துவதன்றி
#பாரதி
போல்#
பாரதி
போற்ற
போல்
வேடமணிவர்
வேடிக்கை
மனிதர்கள்
பாடல்
சொல்லி பதிவர்
பாரதியை
படித்தவர்கள்
என்
போல் ரௌத்திரம்
பழகியவர்கள்
பாரதி
போல்
ஒரு
பாடல் வரியாவது
படைக்க
படாது பாடுபடுகின்றனர்
#பாரதி
போல்#
சமகால சூழலில் ,
பாரதியை படித்திருக்கிறேன்
என்பதை கூட சற்று பயத்துடன் தான்
சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது
கருத்து Courtesy : “ Laxmi “
No comments:
Post a Comment
Leave your comments