என்
ஜன்னல் வழி தினம்
எனை
நோக்கும்
சிறு
பறவையொன்று ,
நான் சிறைப்பட்டிருப்பதாய்
நினைத்து
,
பறந்து
அமர்ந்து, அமர்ந்து பறந்து
சிறகடிப்பது
எப்படியென்று
எனக்கு
சிறப்பு வகுப்பு எடுக்கிறது
அந்தோ
அது அறியுமா
மனிதர்க்கு
சிறகுகள்
அவ்வளவு
சீக்கிரம்
வாய்ப்பதில்லையென்று
No comments:
Post a Comment
Leave your comments