அலறிப்பாயும்
ஆம்புலன்ஸ்
ஏதும்
எனை கடக்காமல்
அலுவலகம்
அடைவதில்லை
நான்
அநேக நாள்
# உயிர்
சாலை #
*******************
வெறி
கொண்ட வேகம் கொண்டு
எனை
முந்தி செல்லும்
எல்லா
வாகனமும்
விபத்தின்றி
வீடு போய்
சேரவேண்டும் என்று வேண்டும்
நல்லோன்
தான் நானும்
நம்புங்கள்
# உயிர்
சாலை #
பெரும்பாலான
பெண்கள்
“ Break “ என்ற
ஒன்றை பற்றி அதிகம்
அலட்டிக்கொள்வதில்லை
போலும்
அவர்தம்
காட்டும்
காதலிலும்
ஓட்டும் வண்டியிலும்
# உயிர் சாலை #
No comments:
Post a Comment
Leave your comments