Thursday 31 December, 2009

New year Greetings


 To all  my friends , well wishers and to all my planetorians

Thursday 24 December, 2009

தாய்மை - Ver.2.0

    













சட்டை எடுத்து கொடு
சாப்பாடு எடுத்து வை
என
நொடிக்கொரு தொல்லை
எனக்கு தராமல்,

தனக்கான நேரங்களை
குட்டி பாப்பாவுக்கு
தந்து  விட்டு,
தன் வேலைகளை
தானே கவனித்து கொள்ளும்
மூத்ததின் முதிர்ச்சியை

காணவே முடிவதில்லை
கணவனிடம்.

Wednesday 16 December, 2009

புதிதாய் வந்த அவள்



கன்னம் கிள்ளி முத்தம்,
நிற ஆராய்ச்சி,
ஜாடை விவாதம் ,
இனிப்பென எளிதாய்
முடிந்துபோகிறது
எல்லோரிடமிருந்தும்
எனக்கான வரவேற்ப்பு

என்றாலும்,
பெற்றவர்கள்
உங்கள் புறக் கழித்தலின்
பொருள் அறியாமல் ,

பூமிக்கு
புதிதாய் வந்த இவள்

ஏற்புரை எழுதிகிறேன்
அழுகை மொழியில்.

Tuesday 15 December, 2009

அன்பு - மனைவிக்கு



















உனக்கானதாய்
விருப்பங்கள்,

விவாதங்கள்
ஏதேனும்
சொல்லியதில்லை
என்னிடம் நீ.


உன் பார்வை ஒன்று
உண்டு என்று
உணர்ந்ததில்லை
நானும்.


உன்னை மறைத்து
என்னையே
பிரதிபலித்தாய்
எல்லோரிடமும்


எல்லாம் செய்து,
எதிர்பார்த்து
காத்திருக்கிறாய்
உனக்கான
அந்த மூன்று வார்த்தைகளை
என்
உதடுகள் உச்சரிக்குமென்று


நெடுங்காலமாய்.





"பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

விடாது கருப்பு

















ஆச்சு , கடந்த ஒரு மாசமா வலை  உலகத்திலும், SMS   லும்
 கிண்டி, கிளறி ,பிரிச்சி காய போட நம்ம இளைய தளபதி யோட
வேட்டைக்காரன் நல்ல மேட்டர இருந்துடிச்சி.
இப்ப ரிலீஸ் தேதி Dec  18 ஆன உடன் நம்ம தமிழ் ரசிகர்கள் கொஞ்சம்
சுருதி குறைஞ்சி போய்ட்டாங்க . டோன்ட் வொர்ரி
உங்களுக்கு ஆக, நீங்க களப்பணி ஆற்றுவதற்காக அடுத்த மேட்டர் ரெடி
என்னன்னு தெரிஞ்சுக்கனுமா

ஸ்டார்ட் மியூசிக் .........
  சல்
  சல்
  சல்
   .



   .













  (டிஸ்கி : மூணு படம் பிளாப் கொடுத்த இளைய தளபதிக்கே இந்த கதினா தல நிலைமை .....................)

Saturday 12 December, 2009

சன்னலோர இருக்கைகள்

பின் இரவு பயணங்களில்
சன்னலோர இருக்கைகள்
கிடைக்கின்ற போதும்

அடுத்த சீட்டு காரரின்
அனுமதி மறுப்பால்

தொடரும் நிலா காட்சி ,
சிலிர் காற்று வருடல்
சுகம் இன்றி

சன்னல்கள் மூடிய படியே
முடிந்து போகின்றன
அந்த பயணங்கள்.

Friday 7 August, 2009

உங்க பையன் எப்படி பைக் ஓட்டுகிறான் என்று தெரியுமா

வித விதமான பைக்குகள் ரோடுகளில் பறக்கின்றன. அதில் 60 % பைக்குகளை ஓட்டுவது யார் தெரியுமா . 17 வயதிலிருந்து 20 வயதுகுள் உள்ள சிறு வாலிபர்கள் (!) தான். முறையான ஓட்டு பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாது அவர்கள் வண்டியை வீரிட செய்தும் , ராங் சைடில் ஓவர் டேக் செய்து ஓட்டுவதும் , கவலை அளிப்பதாய் உள்ளது .மேலும் தலை கவசம் எதுவும் அணிவதில்லை .

ஹிதேத்திரன் மரணம் மூலம் நமக்கு சொல்லி சென்ற பாடம் , அவனது தந்தை விடுத்த வேண்டுகோள் அடிக்கடி நினைவுக்கு வருகிறது .

எனவே , பெற்றோர்களே தயவு செய்து உங்களது மகனே அல்லது மகளே டூ வீலர் ஓட்டுபவர்களாய் இருந்தால் அவர்களது வண்டி ஓட்டும் முறையை நெறி படுத்தி காப்பு முறைகளையும் அறிவுருத்துங்கள்

Sunday 31 May, 2009

இனி நான் சென்னை வாசி

மங்களகரமான 2009 மே மாதம் 27 தேதி முதல் நான் சென்னை வாசி. வலை பூ ஆரம்பித்து ஆறு மாதம் ஆன பின்னும் ஒன்றும் உருப்படியாய் எழுத முடியவில்லை .

பெங்களுருவில் இருந்தவரை பணி சுமை காரணமாக கனநி முன் உட்காருவதே முடியவில்லை . பார்ப்போம் சென்னை ராசியை .

Tuesday 24 March, 2009

உனக்கு மட்டும்












எழுதியது எதையோ என்றால்
எறிந்து விட்டு போவாய்

உன்னையே ரதி என்றால்
உட்கார்ந்து பேசுவாய்

என் வார்த்தைகள் கூட
வழி மாற நீ விரும்ப மாட்டாய்

காதலி என்றே காத்திருப்பாயா
காலம் முழுதும்

என் வாசலுக்கு வந்து போ
மனைவி என்ற மகுடம்
சூட்டிக்கொள்.

விரல் நொடிய வீதி முழுதும்
கோலமிடு .
பாதம் கொண்டு
படி தொட்டு மனையாளு
அடுப்படியில் புகுந்து
ஆர்பாட்டம் செய்

யார் உன்னை தடுப்பது
ஆசிகளுக்கு அவசியமில்லை
ஆண்டுகொள்

உன் வீடு உன் வசம்

இது
இந்த காதல் கவிஞனின்
கடைசி தீர்வு 

வேஷம்















மெல்ல சுருங்கும்
வாழ்க்கை .
அலை, கூட்டம்
புரளி , புழுதி என
புரியாது போகும் .

பேருந்து, பேரிரைச்சல்,
நகர சந்தடியே
நம்மை சுற்றி .

பக்கம் , எதிரில்
அருகில் என
அனைவருமே
அழகிய முகம்
மறைத்து
போலியாய்
ஓர் முகத்தில்.

இறுதி வரை
இருக்க
நாட்பொழுதும்
வேஷத்தரிப்பு.

துரத்தி , கலைத்து
கதவை மூடி
கண்ணுறங்கிபோவோம்
கலைத்துபோட அல்ல
மற்றொருபொழு
து

வேஷம் கட்ட .

Monday 23 March, 2009

வாழ்க்கை













மானுடம் சபிக்கப்பட்டதாய்,
ஆடிக்களைந்தும் ஆவல் ,
தேடல் திசை அறியாமல் ,
இன்னும்பிற .

அனுபவம் பலமாய்
ஆகிருதி வளர்த்தும்
எதிர்ப்புகள், மேலும்
ஏராளமாய் .

நட்பு - வஞ்சம் ,
காதல் - தோல்வி ,
இலக்கு - ஓட்டம் ,
எல்லாம் , எல்லாம் .

உணர்வுகள் உறுத்தி
ஊனம் செய்ய,
உள்ளம் உதறி
உதாசீனம் .

அடுத்த முறை அடைய
ஆசை , பேராசை ,
தொடர்கிறது ஆட்டம் .

இங்கு வித்தை தெரிந்தால்
வெளிச்சம் ,
வெளிச்சமே விமர்சனம் .,
முடிவதில்லை விலக்க,
விலகவும்கூட.

இந்த மந்தைகள்
ஓட்டம்
மரணம் வரை .

கலந்து போவது
கட்டாயம் , அறிக

நிரந்தரம் ஏதுமில்லை
நிகழ்வுகள் தவிர்த்து .