Tuesday 24 March, 2009

உனக்கு மட்டும்












எழுதியது எதையோ என்றால்
எறிந்து விட்டு போவாய்

உன்னையே ரதி என்றால்
உட்கார்ந்து பேசுவாய்

என் வார்த்தைகள் கூட
வழி மாற நீ விரும்ப மாட்டாய்

காதலி என்றே காத்திருப்பாயா
காலம் முழுதும்

என் வாசலுக்கு வந்து போ
மனைவி என்ற மகுடம்
சூட்டிக்கொள்.

விரல் நொடிய வீதி முழுதும்
கோலமிடு .
பாதம் கொண்டு
படி தொட்டு மனையாளு
அடுப்படியில் புகுந்து
ஆர்பாட்டம் செய்

யார் உன்னை தடுப்பது
ஆசிகளுக்கு அவசியமில்லை
ஆண்டுகொள்

உன் வீடு உன் வசம்

இது
இந்த காதல் கவிஞனின்
கடைசி தீர்வு 

வேஷம்















மெல்ல சுருங்கும்
வாழ்க்கை .
அலை, கூட்டம்
புரளி , புழுதி என
புரியாது போகும் .

பேருந்து, பேரிரைச்சல்,
நகர சந்தடியே
நம்மை சுற்றி .

பக்கம் , எதிரில்
அருகில் என
அனைவருமே
அழகிய முகம்
மறைத்து
போலியாய்
ஓர் முகத்தில்.

இறுதி வரை
இருக்க
நாட்பொழுதும்
வேஷத்தரிப்பு.

துரத்தி , கலைத்து
கதவை மூடி
கண்ணுறங்கிபோவோம்
கலைத்துபோட அல்ல
மற்றொருபொழு
து

வேஷம் கட்ட .

Monday 23 March, 2009

வாழ்க்கை













மானுடம் சபிக்கப்பட்டதாய்,
ஆடிக்களைந்தும் ஆவல் ,
தேடல் திசை அறியாமல் ,
இன்னும்பிற .

அனுபவம் பலமாய்
ஆகிருதி வளர்த்தும்
எதிர்ப்புகள், மேலும்
ஏராளமாய் .

நட்பு - வஞ்சம் ,
காதல் - தோல்வி ,
இலக்கு - ஓட்டம் ,
எல்லாம் , எல்லாம் .

உணர்வுகள் உறுத்தி
ஊனம் செய்ய,
உள்ளம் உதறி
உதாசீனம் .

அடுத்த முறை அடைய
ஆசை , பேராசை ,
தொடர்கிறது ஆட்டம் .

இங்கு வித்தை தெரிந்தால்
வெளிச்சம் ,
வெளிச்சமே விமர்சனம் .,
முடிவதில்லை விலக்க,
விலகவும்கூட.

இந்த மந்தைகள்
ஓட்டம்
மரணம் வரை .

கலந்து போவது
கட்டாயம் , அறிக

நிரந்தரம் ஏதுமில்லை
நிகழ்வுகள் தவிர்த்து .