Tuesday 8 December, 2015

மழை - சென்னை


   










     பெய்த மழை

     நாம் செய்த 
     சுற்றுபுற சூழல் 
     மாசுகளை 

     சுட்டி காட்டி 
     கொட்டி  போனது 
**********************************
  பெய்த மழை

  இணைத்தது
  மனிதர்களை

  மறக்க  செய்தது
  மதங்களை

  முடியவேயில்லை
  அரசியலையும் ,
  அரசியல்வாதிகளையும் .
   மாற்ற.

   **************************
   
   பெய்த மழை

    துளிர்க்க  செய்த 
    மனிதத்தை 

    காத்து 

     கிளை தழைத்து 
     மலர செய்வோம் 

    தொடர்ந்து 

    *****************************

      
 

Sunday 8 November, 2015

மழை,




மழை,

காலகாலமாய்
என்   கவிப்பொருளாய்.

மழை,

அழகு
வீழ்ச்சியிலும்வீழ்ந்த பின்னும்.

சத்திரியன் போல் 
சகலரையும் ஈர்க்கும்.

மழை  யின் 

மற்றொரு பெயர்
பிரம்ம தீர்த்தம்.


நனைய தயங்கி
கூட்டுக்குள் 
நாம் கிடக்க,
ஆரவாரமாய்
பெய்யும் மழை,
எழுந்து வாநனைந்து போ என
நச்சரிக்கும் .


சூடாய் ஏதேனும்
சுவைத்த படி
மழை
ரசியுங்கள் மனிதர்களே
மண்ணில் அது சொர்க்கம்.


வாராது வந்த  மாமழையை 
வசையாது 

மறுபடியும் வர சொல்லி 
வணங்குங்கள் 
என்றும்  வாழும் வையகம் 



Thursday 17 September, 2015

இவன்













அக்னி  குஞ்சு 
ஆதவன்   வரம் 

அறிவின் அடையாளம் 
ஆர்பரிக்கும் அலை 

 புயலின் பிள்ளை 
புகழின்  முகவரி 

சாக வரம் 
சத்ரிய விலாசம் 

கர்வத்தின் எதிர் 
புரியாத புதிர் 

இறைவனின் ஆச்சரியம் 
இதுவரை மனிதன் 

பேரன்பும் பெருங்கோபமும் குணம் 
புதிதாய் பிறப்பான்  தினம்



Thursday 3 September, 2015

அப்பா












Mr.K.SUBRAMANIAN
(FEB 27, 1933 - SEP 3, 2004)
---------------------------------------
Appa -------You 

 Taught Me Nothing 
 Guided Me Nothing 
 Were a Part in Nothing 
  
 But , Given  Freedom 
 In Everything
  
 That Freedom
  Helps me to  Learn More 
  Understand the Life More 

  Whether Iam Good or Bad
  With all  my Act Thru That Freedom 

  Dont Know 

  But    I Survived
  Still  amongst  All Struggle , and 
  Enjoys the Game of Life , YES 
  I AM HAPPY

  That what you want 
  That what you  Prayed  for me 
     
  Thank you Appa 

  -----------In Ever Remembrance of My Dad -----------
                 Suresh.S.Manian