Sunday 31 December, 2017

Old year -New Year



ஏதேதோ செய்தும்
Impress  செய்ய முடியாமல்
நான் தவிக்க
ஏதுமே செய்யாது
எல்லோரையும்
எப்படி Impress செய்கிறாய்

தொடங்கும் ஆண்டிடம்
முடிகின்ற ஆண்டு
முணு முணுக்கிறது

Monday 25 December, 2017

காதல் காலங்களில்




கண் மூடி இருக்கையில்
எல்லாம்
ஏதாவது ஒரு கவிதையை
கற்றுக்கொடுக்கிறது
 உன் காதல்
 ***************
சகலமும் செய்தும்
சமாளிக்க முடிவதில்லை
காதல் காலங்களில்
சொன்ன  சாகா பொய்கள்
 ******************
என் நினைவிலிக்கிறது
காதல் காலங்களில்
எழுந்து போ, எழுந்து போ
என போலியாய்
எரிந்து விழுவாய்
அசையாது அமர்ந்தபடியும் ,
என் விரல்களை விடாத படியும்  
 ********************
மறுக்க மாட்டாய்
காதல் காலங்களில்
மறந்து போ மறந்து போ
என மறுபடி மறுபடி
சொல்லியே
என் மனசுக்குள் வந்ததை  
 *********************
இன்றும்
 நம் காதல் சாலைகளை கடக்கையில்
பார்க்கிறேன்
காதல் காலங்களில்
நாம் விட்டு வந்த   
வெட்கப்பூக்கள் விளைந்து கிடப்பதை
 ***********************
 உன் அன்பால்  
அழியாமல் இருக்கிறது
ஆப்டர் மேரேஜிலும்
நம் காதல் கால
அரோமா





DEC 6















பாவி மனிதா
பாவம் பாபரும் , ராமரும்
பத்திரமாய் இருக்கும்படி
பரஸ்பரம் தேற்றிக்கொண்டு
பயந்தபடியே தான் கடக்கிறார்கள்
பலகாலமாய் 
இருவரும் இந்நாளை

சமத்துவம்










சாமானியனை போலவே
சலுகைகள்
ஏதும் கிடைப்பதில்லை
சாலை விரிவாக்கத்தில்
சாலை ஓர  கோவில் சாமிகளுக்கும்


குழந்தையாய்









# உயிர் சாலை #



அலறிப்பாயும் ஆம்புலன்ஸ்
ஏதும் எனை கடக்காமல்
அலுவலகம் அடைவதில்லை
நான் அநேக நாள்

# உயிர் சாலை #

*******************

வெறி கொண்ட வேகம் கொண்டு
எனை முந்தி செல்லும்
எல்லா வாகனமும்
விபத்தின்றி வீடு போய்
 சேரவேண்டும் என்று வேண்டும்  
நல்லோன்  தான்  நானும் 
நம்புங்கள்

# உயிர் சாலை #
*************************

பெரும்பாலான பெண்கள்  
“ Break “ என்ற ஒன்றை பற்றி அதிகம்
அலட்டிக்கொள்வதில்லை  போலும்
அவர்தம்
காட்டும் காதலிலும்
 ஓட்டும் வண்டியிலும்

 # உயிர் சாலை #



#பாரதி போல்#
















மாநிலம் கடப்பேன் என்கிறார்கள் மக்கள்
நாடு கடப்பேன் என்கிறார்கள் நடிகர்கள்
அறிவிப்பின்றி அடிக்கடி
அண்டம் கடக்கிறார்கள் அரசியல்வாதிகள்
கடுப்பேறிய எனை போன்ற
காமன்மேன் என் செய்ய ?
பெருங்கோபம் பொறுத்து
போலி பேராண்மை பேணி
காலம் கடத்துவதன்றி

#பாரதி போல்#

 *******************
பாரதி போற்ற

போல் வேடமணிவர்
வேடிக்கை மனிதர்கள்

பாடல் சொல்லி பதிவர்
பாரதியை படித்தவர்கள்

என் போல் ரௌத்திரம்
பழகியவர்கள்

பாரதி போல்
ஒரு பாடல் வரியாவது
படைக்க படாது பாடுபடுகின்றனர்

#பாரதி போல்#

 ********************

சமகால சூழலில் ,
பாரதியை படித்திருக்கிறேன்
என்பதை கூட சற்று பயத்துடன் தான்
சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது

கருத்து Courtesy  : “ Laxmi “

#பாரதி போல்#

***************************

த்ரிஷ்டி





Saturday 2 December, 2017

#மழைக்காலகவிதை#



நனைவது எனக்கு பிடிக்கும்
என்று உனக்கு தெரியும்.

நீ நனைந்து கொண்டிருப்பாய்
என்பது எனக்கு தெரியும்

#மழைக்காலகவிதை#

மனிதசிறகு


என் ஜன்னல் வழி தினம்
எனை நோக்கும்
சிறு பறவையொன்று ,
நான் சிறைப்பட்டிருப்பதாய்  
நினைத்து ,

பறந்து அமர்ந்து, அமர்ந்து  பறந்து
சிறகடிப்பது எப்படியென்று
எனக்கு சிறப்பு வகுப்பு எடுக்கிறது

அந்தோ அது அறியுமா

மனிதர்க்கு சிறகுகள்
அவ்வளவு
சீக்கிரம் வாய்ப்பதில்லையென்று

கலவை
















Wednesday 22 November, 2017

ஒரு கடவுள் மறுப்பாளனின் கடைசி கவிதை ..........











அற்புதம் ஏதும் நிகழாமலே
அனேகரது
ஆயுள் முடிந்து போகிறது

 இயலாமை அறிந்தும்
இன்னும் ஆண்டவன்
அற்புதம் நிகழப்பண்ணுவேன் என
அரற்றிக்கொண்டேயிருக்கிறான்

அடங்காது ஆன்மீகம் .......

விடாது கருப்பு .............

Wednesday 1 November, 2017

#மழைக்காலம்#




குதுாகலத்தில்,
பள்ளி குழந்தைகளும்...
பரணியில் கிடந்த குடைகளும்........

#மழைக்காலம்#
---------------------------

மறுகி நடக்கும் மான்கள் போல்
மழை கோட்டணிந்த மழலைகள்.....

#மழைக்காலம்#
--------------------------------

தேவ தூதர்கள்தான்
மழை நேர தேநீர் சேவை
மறுக்காமல் செய்பவர் எல்லாம்

#மழைக்காலம்#
 ----------------------------

அரசு எந்திரத்தை அர்சிக்க
ஆண்டுக்கொருமுறை
அனைவர்க்கும் அமையும் சந்தர்ப்பம்......

#மழைக்காலம்#
----------------------------------------

மறைத்த, மறந்த, ஏதேனும்
ஓர் நிகழ்வை
நிச்சயமாய் நினைக்கலாம்
மழைக்கால மனசு .....

#மழைக்காலம்#
---------------------------------- 




Tuesday 31 October, 2017

சீரியல் சிக்கலில் சிவா











ஆண்டவனிடம் இருந்து
அவசர அழைப்பு

அவரில்லத்தில்
தொலை காட்சி இணைப்பை
உடனே துண்டிக்க சொல்லி

காரணம்
சன் விஜய்யின் சதி

சன்னில் விநாயகர் தொடர்
விஜயில் முருகன் தொடர்

சன்னை திருப்பினால் சண்முகனுக்கும்
விஜயை வைத்தால் விநாயகனுக்கும்
கொப்பளிக்கிறதாம் கோபம்

மாம்பழ கதை
மறக்கவில்லை்
மாயவனுக்கு

சன்களுக்குள்
சண்டையை காண
சக்தியும் இல்லை 
சர்வேஸ்வரனுக்கு 

கட் செய்ய சொல்லி விட்டார்
கனைக்சனை



Sunday 18 June, 2017

தந்தையர் தினம்














அப்பா


என்றாலே எல்லோர்க்கும்
எப்போதும் உண்மையான
கதாநாயகன்
எப்போதாவது போலி எதிரியும் கூட
***************************
அப்பன் என்றால்
யாவர்க்கும்
யானையாயிர  பல ஆயுதம் தான்
********************
அப்பாவென்று தனை அழைக்கும்
குழந்தைகளையும்
என்னப்பா என்னம்மா
என விளிக்கும்
வெள்ளை மனசு
*********************
அப்பனாய் அவதரிக்கும் குழந்தையும்
குழந்தையாய் குழையும் அப்பனும்
அமையும் வீடு ஆசிர்வதிக்கப்பட்டது
***********************
தன்னிலை தாழ்ந்தாலும்
தன் மழலை
வாழ தவிக்கும்
தந்தையர் வாழ்வு
தவ வாழ்வு
**********************
இயலாது எப்போதாவது
எரிச்சலையும் கோபத்தையும்
இயல்பாய் வெளிக்காட்டும்
அப்பன்கள்
எந்நேரத்திலும்
அளவற்ற அன்பை
உள்ளே  மறைக்கும் 
உலக மகா நடிகன்கள்
************************
தந்தை என்றும்
சந்தை படுத்திக்கொண்டதேயில்லை
தன் அன்பை
*************************
தந்தையர் அன்பை போல்
ஆர்பாட்டங்கள் எதையும்
தாங்கி பிடிப்பதில்லை 
தந்தையர் தினம்
**************************
தந்தையரை நினைவு கொள்வதிலும்
தந்தையராய் வாழ்வதிலும்
பெருமை கொள்வோம்
************************
மகிழ்வான தந்தையர் தின வாழ்த்துக்கள்


Sunday 23 April, 2017

# ஞாயிறு போற்றுதல் #







ஆயிரம் சொல்லுங்கள் 
ஞாயிறு சிண்ட்ரோமை 
அனுபவிக்காதவர்கள் 
அரை மனிதர்கள்தான் 

தாமத விடியல் 
தாமத குளியல் என்று 
ஞாயிறு தின வேலைகள் 
தாமாய் தான் நடக்கும் 
தாமதமாய் தான் கடக்கும் 

எத்தனை எச்சரிக்கையாய் 
இருந்தாலும் 
சோம்பலுடன் சோடி 
போட்டு விடுகிறது 
எல்லா ஞாயிறும் 

நேர நேர்மை 
நேர்வதேயில்லை 
ஞாயிறு தினங்களில் 

இந்த வாரமாவது 
செய்யணும் என்ற 
வேலை பட்டியலை 
சமாதானத்துக்கு 
சனியிரவே அழைக்க 
ஆரம்பிக்கின்றன 
ஞாயிறு  சோம்பல்கள் 

திங்களை திட்டாமல் 
ஞாயிறுகளை 
கடப்பதில்லை 
நாம் 
காலகாலமாய்

காதல் சந்திப்பின்
கடைசி நொடிகளை போல் 
எல்லா ஞாயிறின் இரவுகளையும் 
கனத்த மனசோடுதான்
கடக்க வேண்டியிருக்கிறது 
சற்றே நீண்டிருக்கலாம்
என்ற சலனத்துடன்