Monday 29 January, 2018

நாமாய் இருப்போம்
















அறம் இல்லா அகம் கொண்டோர் ,
அறிந்தே பேசி திரிவர் புறம்.

தரம் தாழ்ந்த விமர்சனம் காண் ,
நாம் கொள்நிலை மரம்.

வரம் உண்டு நம் வாழ்வில் ,

கொண்டோம் கணக்கிலா
கை கொடுக்கும் கரம்

Sunday 21 January, 2018

# ஞாயிறு போற்றுதல் #













அவஸ்தை தான் என்றாலும் 
உனக்காய் ஆறு (நாள் )
அமைதியாய் கடக்கிறேன்

ஆனால் நீ 
தொடங்கியதும் முடிவதும் 
முழுமையாய்
உணரும் முன்னே 
உதறிப் போகிறாய் 
உன் இருப்பை

வருவாய் திரும்பி என்ற 
நம்பிக்கை தான்
உனை பிரிவதை கூட 
வழக்கமாக்கி கொண்டிருக்கிறது

நா (ன்)  இரு 
என்றாலும் இருக்க மாட்டாய்

போய் வா ..............
  

ஞாயிறு

Wednesday 17 January, 2018

அக்கரை வானம்





எண்ண முடியுமா?
என்னால் முடியுமா ?
என்னவானாலும்
எண்ணி முடிக்கலாம்
நட்சத்திரங்களை
என்றிருக்கிறேன் நான்
*****************
இருக்கலாம்
நம்மை போலவே
நட்சத்திரங்களும்
மனிதப் புள்ளிகளை
எண்ண முடியுமாவென்று
ஏங்கிக்கொண்டு

Sunday 14 January, 2018

பொங்கல் -2018






புதிய கவலைகள்
பூத்த படிதான் இருக்குமென
புரிந்துகொண்ட புத்தி
பழைய கவலைகளை
போகி தீயில்
போட்டு எரிக்கிறது
போன வருடம் போலவே

வளம் பல பொங்க
பொங்கிய நலம் தங்க
தங்கிய வாழ்வு செழிக்க
செழித்த நம் உறவு சிறக்க
சிறந்த தை
இத் தை
தரட்டும்


Wednesday 10 January, 2018

களவாடிய பொழுதுகள்







காத்திருப்பில்          
கரைகின்றன கனவுகள்

கனியா காத்திருப்பு
கலைத்து போடும்
தன்னம்பிக்கை இருப்பு

 நல் வாய்ப்புக்கு
காத்திருக்க சொல்லி
நம் பொழுதுகளை
நயவஞ்சகமாய்
களவாடி போகிறது காலம்

உறுமீனும் உறுபசியும்
உதாரணத்துக்கு மட்டும்.
உதவாது உலகியல் வாழ்வுக்கு

Sunday 7 January, 2018

# ஞாயிறு போற்றுதல் #












ஞாயிறு

வாராவாரம் வந்தாலும்
அலுப்பதேயில்லை
அதன் ஆரவாரம்

ஞாயிறு ஒய்வு 
மழை நனைதல் போல் மனசுக்கு மருந்து

துவைத்து எடுக்கும் துணிகளை போல்
வார அலுப்பிலிருக்கும் மனசை
அலசி ஆறுதல் படுத்துகிறது

ஞாயிறு

Cell Phone Sin














மூன்றாம் மனிதன்
மொபைல் போனிடம்
முணுமுணுக்கிறான்
நான் உன்னை பிரிவதேயில்லை
உன்னை விட்டு விலகுவதுமில்லை

சிறு பொய்யோ ,
குறும் படமோ ,
தெரிந்தோ தெரியாமலோ
எல்லோரும் செய்கின்றோம்
ஏதோ ஓர் பாவம்
செல் போன் மூலம்
பதிலுக்கு
சிலுவையாய்
அதையே நம்மை
சுமக்க  வைக்கிறது  காலம்