Friday 7 January, 2011

வெள்ளி கிறுக்கல்கள்

ஓடிப்போனது நீ இல்லாத எட்டு மாதங்கள்.

நினைவுகள், இயலாமை ,
கேள்விகள் , சிந்தனை என
ஆர்பரிக்கும் ஆழிப்பேரலையாய்
ஆறாம் அறிவு.

அழுத்தி சிதறி வழியுது மனசு
கொட்டிவைக்கிறேன் ................
***********

இதுவும் கடந்து போகும்
என்று
அனைத்தையும் கடக்கிறேன்

உன் மரணம் தவிர்த்து.

********
கலங்கிய கண்களுடன்
கடவுள் என்பவனிடம்
கேட்கவேண்டிய
கேள்விகள் பல.

கேள்வி ஒன்று ....

கும்பிடும் போதெல்லாம்
குறைந்த பட்ச குதூகலத்தை
மட்டுமாவது எனக்கு
கொடுத்து போ
என்றுதானே கேட்டேன்

ஏன்
அவசரமாய்
அதிக பட்ச துயரம்
அளித்தாய் எனக்கு

நான் கொண்டவளை கொன்று.

தொடர்வேன் கேள்விகளை
காத்திருங்கள் கடவுள்களே
***********
சுயத்துவம்

நடந்தவைகளை மாற்ற
நம்மால் முடியாது .
ஏன் , கடவுளால் கூட
முடியாது.

நடக்க இருப்பதை மாற்ற
கடவுளால் முடியும்.
நம்மாலும் முடியும்

நாம் கடவுள்.
***********
இந்த டுவிட் என்னை டுவிட்டியது

"உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் ஒரு
முறையாவது நம்பிக்கை துரோகம் செய்து
இருக்கும் ஒரே ஆள் ----- கடவுள் மட்டுமே"


------ இதன் பிதா மகன்
லதாமகன் @ ட்விட்டர் .காம்


நன்றி.