Friday 15 January, 2016

பொங்கல் -2016


பொங்கல் சிந்தனை
**********************










கொட்டி வை நெல்லு திட்டு
 கட்டி வை கரும்பு கட்டு
 வேட்டியை இறுக்கி கட்டு
 நடக்குமா ஜல்லிக்கட்டு
 எப்ப முடியும் இந்த மல்லுகட்டு
  ---------------------------------------

 ஜல்லிகட்டை நடத்து
 கலாசாரத்தை காப்பாற்று
 கத்தியபடி கலைந்து
 போனவர்களின் வீட்டில்
 எல்லாம் பொங்கல்
 குக்கரிலா  , மண் பானையிலா
  # சந்தேகம் #

 -------------------------------------------
தமிழர்களே ,தமிழர்களே
ஐந்தாண்டுக்கு
தை திங்களை
புது வருஷ நாள் என்றும்
அடுத்த ஐந்தாண்டுக்கு
 பொங்கல் திரு நாள் என்றும்
 கொண்டாட  பழகி
 கொள்ளுங்கள்
# அவல அரசியல் #
---------------------------------------------------
முன்னிரவு கோலம்
குக்கர் பொங்கல்
கடிக்க பயந்து கரும்பு ஜூஸ்
வாட்ஸ் அப்பில் வாழ்த்து
 நட்பு ,  உறவு சந்திப்பு தவிர்த்து
கூட்டுக்குள் முடங்கி
தொலைகாட்சியில்அடங்கி
 கொண்டாடி மகிழ்வோம்
 பொங்கலோ பொங்கல்
-------------------------------------------------


கல்யாண காலம்















காதல் மறந்து
காலம்  கடந்தேன்
எனக்கான நீ
எங்கேனும் காத்திருப்பாய்
என்று .

 பெண் பார்க்கும் நாள்.


 உன் முதல் விழி வீச்சில்

 ரசாயன மாற்றம்
நிகழவில்லை ஏதும் 
 என்னுள்

காபி கோப்பை தந்தபடி

கடை கண்ணால் பார்த்தாலும்
களவாடவில்லை , 
நீ
என்  இதயம் .

பிடிச்சிருக்கா ,என்ற

உறவின் கேள்விக்கு
பிடிச்சிருக்கு என சொல்லி
நீ விட்டுசென்ற
வெட்கத்தில் தானடி
வீழ்ந்தேன் நான்.

திருமணங்கள்  சொர்க்கத்தில் தான்

நிச்சயிக்கபடுகின்றனவாம்
நாம் திருமணம்
நிச்சயிக்கபட
நாம் இருந்த இடமே
சொர்கமானது.

திருமண நாளில்

உன் மலர் கழுத்தில்
மங்கள நானின்
முதல் முடிச்சை - " நான் "
இரண்டாம் முடிச்சை - " உன்னை "
மூன்றாம் முடிச்சை --  "காதலிக்கிறேன் "
என சொல்லித்தான்
அணிவித்தேன் .
அறிவாயா  நீ .


அதிர்ஷ்ட காரியடி  நீ , என்று

உன்தோழிகள்
அவசரமாய்  சொல்லி போனதை
கவனித்த நான்,
 என் நண்பர்கள்  
 மச்ச காரண்டா  நீ ,என்றதை
மறைக்க முடியவில்லை
உன்னிடம் .

சொந்தங்கள் கூடி

செய்த பந்தம் , இது
வா தேவதையே
 நீ  என்  சொந்தம் .

காதலித்து பார்க்கவில்லை

காதலிக்க நேரமில்லை
கல்யாணமா  காதலின் எல்லை.
கவலை விடு
அன்பே
ஆதலினால்
இனி  காதல் செய்வோம்